10 மருத்துவக் கல்லூரிகளுக்கு அபாயம்.. தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Update: 2023-05-28 16:19 GMT

    தமிழ்ந ாட்டில் மேலும் 10 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் ஆபத்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி, அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்து தகுதிகளுடன் நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்