ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின்போது வர்ணனையாளராக செயல்பட்ட பாண்டிங்கிற்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.