பெண்ணின் புகைப்படத்தை ஆபாச மாகசித்தரித்து வெளியிட்ட கடன் செயலி - ஈரோட்டில் அதிர்ச்சி - பின்னணி என்ன?
ஈரோடு அருகே, ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றதற்காக, புகைப்படத்தை மார்பிங் செய்து அனுப்பிய மோசடி கும்பலால், மனமுடைந்த பெண் மாயமானதை அடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் இருகாலூர் பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ஆன்லைன் செயலி மூலம் மனைவி கடன் பெற்றிருந்ததாக தெரிவித்திருந்தார். மோசடி கும்பல் மனைவியின் செல்போனை ஹேக் செய்து, அதில் இருந்த அனைத்து எண்களுக்கும், புகைப்படத்தை, மார்பிங் செய்து அனுப்பியதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மனைவி, காணாமல் போனதாகவும் தெரித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.