“தடுப்பூசி போட்ட உடன் குழந்தை பலி?“ - வயிற்றில் அடித்து கதறும் தாய் -நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்
அங்கன்வாடி மையத்தில் 10 மாத பெண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய நிலையில் குழந்தை பலி என புகார்
குழந்தையின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டம்
தடுப்பூசி போட்ட உடனே குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு
குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மருத்துவரின் காரிலே அனுப்பி வைத்ததாகவும் புகார்
தஞ்சையில் அங்கன்வாடியில் தடுப்பூசி போடப்பட்ட 10 மாத பெண் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதுகுறித்த நேரடி தகவல்களை தருகிறார் எமது செய்தியாளர் சையது மவுலானாவிடம் கேட்கலாம்...
தடுப்பூசி போடப்பட்ட 10 மாத பெண் குழந்தை உயிரிழப்பு. என பெற்றோர்கள் குற்றச்சாட்டு மருத்துவமனையில் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்காமல் போராட்டம்
தஞ்சாவூர் அருகே மடிகை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் - கீதா தம்பதிகளின் பத்து மாத பெண் 10 மாத குழந்தைக்கு இன்று துறையூர் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட அடுத்த சில நேரங்களில் மயக்கம் ஏற்பட்டதால் முறையான சிகிச்சை அளிக்காமல் தஞ்சை அரசு இராசமிராசுதார் மருத்துவமனைக்கு மருத்துவரின் காரிலே அனுப்பி வைத்ததாகவும் எனவே இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என உறவினர்கள் தஞ்சை அரசு இராசமிராசுதார் மருத்துவமனையில் குழந்தையின் உடலில் வாங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.