மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமராவதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பட்டியலினத்தவர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமைகளுக்காக தான் போராடியதாகவும், அதனால் தனது பெயரை களங்கப்படுத்த எதிர்க்கட்சிகள் பல்லாயிரம் கோடியை செலவழித்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைப் போல, பிரதமர் மோடிக்கு தற்போது ஞாபக மறதி ஏற்பட்டு விட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.