தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் மாநிலங்களவையில் மத்திய அரசு அதிரடி| Water | Tamil Nadu | Karnataka |

Update: 2023-07-25 05:06 GMT

வரும் மாதங்களில் பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட கர்நாடகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநிலங்களவை எம்.பி.க்கள் சண்முகம், வைகோ ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் பிஸ்வேஷ்வர் துடு பதில் அளித்தார். அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆண்டுதோறும் பிலுகுண்டுலுவில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று கூறினார். கடந்த ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீர் திறக்க வேண்டிய நிலையில் 2.83 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டதாகவும், ஜூலை மாதம் 31.24 டிஎம்சி திறக்க வேண்டிய நிலையில் 1.071 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தமிழகத்தி ன் கோரிக்கையை ஏற்று, பிலிகுண்டுலுவில் இருந்து உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடக நீர்வளத் துறைச் செயலருக்கு காவேரி மேலாண்மை ஆணையம் கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் கூறினார். வரும் மாதங்களில் பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்