கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி நீர், பல மயில்கள் கடந்து காவேரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு வந்தடைந்தது. திருவாலங்காடு முதல் கதவணையான விக்ரமன் ஆற்றுக்கு நீர் வந்ததை அடுத்து, பாசன வசதிக்காக 782 கன அடி தண்ணீரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். மேட்டூர் அணையின் விதியின் படி, காவிரி கடலுடன் கலக்கும் தண்ணீர், மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு வந்த பிறகு, மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி, ஓரிரு நாட்களில் தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.