தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், நாளை கும்பகோணத்தை அடைய உள்ளது. இந்நிலையில் அங்குள்ள காவிரி ஆற்றில் மதுபாட்டில்கள், குப்பைகள் குவிந்து அசுத்தமாக காட்சி அளிக்கிறது. போர்க்கால அடிப்படையில் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.