கண் மருத்துவமனையில் பழுதாகி நின்ற லிப்ட்... 2 மணி நேரமாக லிப்டில் சிக்கி தவித்த 8 பேர் - தொடரும் லிப்ட் பழுது அவலங்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள, பிரபல தனியார் கண் மருத்துவமனையில், லிப்ட் பழுதாகி திடீரென நின்றுள்ளது.
சிகிச்சைக்கு சென்ற 5 பெண்கள் உட்பட 8 பேர், லிப்டில் 2 மணி நேரமாக சிக்கி தவித்தனர்.
தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், லிப்ட் கதவை உடைத்து 8 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட குறிப்பில், 5 பேர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய லிப்டில் கூடுதலாக 3 பேர் ஏறியதால் பழுதாகி நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.