நிலம் ஆக்கிரமிப்பு பிரச்சினை...கிளினிக்கின் கண்ணாடிகள் உடைப்பு - பதறவைக்கும் வீடியோ காட்சி

Update: 2022-10-18 03:15 GMT

நிலம் ஆக்கிரமிப்பு பிரச்சினை...கிளினிக்கின் கண்ணாடிகள் உடைப்பு - பதறவைக்கும் வீடியோ காட்சி

நாகை கடைத்தெருவை சேர்ந்த அரசு மருத்துவரான கமலஆறுமுகம் என்பவர், தனக்கு சொந்தமான வணிக வளாக கட்டடத்தில், சித்தா கிளினிக் நடத்தி வருகிறார். மருத்துவரின் வணிக வளாக கட்டிடத்தின் வாயில் பகுதியை, சண்முகம் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சண்முகம் தனது மகன் மணிமாறன் மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று, கிளினிக்கில் தகராறில் ஈடுபட்டார். அப்போது மருத்துவரின் தாயாரான சாந்தியை தாக்கியதில், அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்