இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து, பார்க் டே சாங் விலகியுள்ளார்.
இந்த தகவலை பார்க் டே சாங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், சமீப காலமாக பி.வி.சிந்துவின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்ததால், அவர் புதிய பயிற்சியாளருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே பி.வி.சிந்துவின் விருப்பத்தை மதித்து, பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதாக பார்க் டே சாங் தெரிவித்துள்ளார்.