"ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் தாக்குதல்" - சிதம்பரம் தீட்சிதர் பரபரப்பு புகார்
சிதம்பரம ் நடராஜர் கோவிலில் பூஜையில் இருந்த தன்னை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகள் தள்ளிவிட்டு நிலைகுலையச் செய்ததாக, கற்பக கணேச தீட்சிதர் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். தபால் மூலம் சிதம்பரம் காவல் ஆய்வாளருக்கு புகார் மனு அளித்துள்ள அவர், தான் அணிந்திருந்த ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் அதிகாரிகள் ஆக்ரோஷமாக தள்ளிவிட்டதாகவும், பூஜைக்கு இடையூறு ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென, அந்த மனுவில் கோரியுள்ளார்.