டெய்லர் பெண்ணுடன் தகாத உறவா? டிராவல்ஸ் உரிமையாளர் எழுதிய கடைசி கடிதம்..

Update: 2022-09-05 13:07 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தகாத உறவு விவகாரத்தில் போலீசார் மிரட்டியதாக கூறி டிராவல்ஸ் உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூலத்தோப்பு பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சரவணசெல்வத்திற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கும் டெய்லர் தனலட்சுமிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

திடீரென சரவணசெல்வத்துடனான பழக்கத்தை நிறுத்திக் கொண்ட அந்த பெண், அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பொய் வழக்கு போட்டு போலீசார் தொடர்ந்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணசெல்வம், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது மரணத்திற்கு தனலட்சுமியும், காவல்துறையினருமே காரணம் என கடிதம் ஒன்றும் அவர் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்