"1 வருஷ சம்பளம் தர்றோம்.. எல்லாரும் ராஜினாமா பண்ணுங்க" - ஊழியர்களுக்கு ஆஃபர் கொடுத்த கூகுள், அமேசான்

Update: 2023-04-11 09:55 GMT
  • பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக செலவுகளை குறைத்துவரும் நிறுவனங்கள், ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
  • இதனிடையே, ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் கடுமையான தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களால், ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவது நிறுவனங்களுக்கு எளிதானதாக இல்லை.
  • இந்த நிலையில், பிரான்சில் பணிபுரியும் ஊழியர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தால் நல்ல ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் அறிவித்துள்ளது.
  • அதேபோல, 5 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள மூத்த மேலாளர்கள் ராஜினாமா செய்தால், ஒரு ஆண்டு சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்கப்படுமென, அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளதாக, ப்ளூம்பெர்க் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்