ஒரே மேடையில் பதிலடி... நேருக்கு நேர் அதிரடி காட்டிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Update: 2025-01-05 06:40 GMT

ஜிஎஸ்டி வரியால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று, டாட்டா சன்ஸ் குழுமத் தலைவர் சந்திரசேகர் கருத்து தெரிவித்த நிலையில், ஜிஎஸ்டியால் வளர்ச்சி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், திருச்சி என்.ஐ.டியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகர்,

ஜிஎஸ்டி வரியால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பணபரிமாற்றம், ஆதார் என டிஜிட்டல் கட்டமைப்பு இந்தியாவில் வலிமையாக உள்ளதாக குறிப்பிட்டார். இதன் பின்னர் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி வரி விதிப்பால் நிறைய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜிஎஸ்டி வரியால் வளர்ச்சி என்கிறார்கள், ஆனால் அது பெரிய வளர்ச்சி இல்லை, சாதாரணமாக வரக்கூடிய வருவாய் தான் என்று தெரிவித்தார். ஜிஎஸ்டியால் வளர்ச்சி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்