"ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யாதது தான் அதிமுக தோல்விக்கு காரணம்" - மாஜி அமைச்சர் பரபரப்பு பேச்சு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின்போது, சசிகலா மீது விசாரணை கமிஷன் வைக்க சொன்ன ஓ.பன்னீர் செல்வம், தற்போது, சசிகலா, டிடிவி தினகரனைத் தேடிச் செல்லும் கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். வாணியம்பாடி அருகே நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தேர்தல் பிரச்சாரம் செய்யாததுதான் அதிமுகவின் தேல்விக்கு காரணம் என்று கூறினார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்பதில் ஓபிஎஸ் தெளிவாக இருந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.