சேலத்தில் நடிகர் ஆர்யாவை காண ரசிகர்கள் குவிந்த போது கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. நடிகர் ஆர்யா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் விளம்பரத்தை வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மாலில், நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி ஆகியோர் வெளியிட்டனர். அப்போது, நடிகர் ஆர்யாவை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம், அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.