விருதுநகர் மாவட்டத்தில் ஏரியில் குளிக்க சென்ற காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரசோழன் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். காவல்நிலையம் எதிரில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற கருப்பையா, நீண்ட நேரம் ஆகியும் வராததால் காவலர்கள் தேட ஆரம்பித்தனர். அப்போது, கருப்பையா கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.