34 நிமிடத்தில் 66 செய்திகள்-காலை தந்தி செய்திகள்..!

Update: 2023-04-22 04:29 GMT
  • தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதை அடுத்து இன்று கொண்டாட தலைமை ஹாஜி அறிவித்தார். அதன்படி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
  • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,ஒரு மாத நோன்பை கடைப்பிடித்து, இல்லாதோருக்கு ஈகை அளித்து சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • சிறுபான்மை மக்களை பாதுகாப்பது திராவிட மாடல் ஆட்சியின் அடையாளங்களில் ஒன்று என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அங்கு நடைபெற்ற சமத்துவ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், மயிலம் ஆதீனம், அருட்சகோதர சகோதரிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் பங்கேற்றனர்.
  • ரமலான் பண்டிகையை முன்னிட்டு மும்பையில் உள்ள சந்தையி மக்கள் கூட்டம் அலை மோதியது. முகமது அலி சாலையில் இருந்து சந்தை முழுவதும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. பண்டிகைக்காக பொருள்கள் வாங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்