34 நிமிடத்தில் 63 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (11.06.2023)

Update: 2023-06-11 03:55 GMT


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடும் நமதே நாற்பதும் நமதே என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு அச்சாணியாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது என்றார். யார் வந்தாலும் திமுக அஞ்ச போவது கிடையாது என்று கூறிய அவர், திமுகவின் தொண்டர்களை கூட அசைத்துப் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், பாஜக சார்பில் பல்வேறு துறைகள் சார்ந்த 25 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் சாராத கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை சார்ந்த பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். நடிகர் ஜிவி பிரகாஷ், இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, அப்போலோ மருத்துவமனை இயக்குனர் பிரதாப் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்பு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

கோடை விடுமுறையை கொண்டாட ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர். பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், வெளியூர் சென்ற பயணிகளை மீண்டும் சென்னைக்கு அழைத்து வர ஏதுவாக, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்காக அரசுப் பேருந்துகள் தூய்மைப்படுத்தப்பட்டு, சீர்செய்யும் பணி முடிந்து தயார் நிலையில் உள்ளன.

மயிலாடுதுறையில் தருமபுர ஆதின பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியின் நிறைவாக, ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்