37 பேருக்கு மன்னிப்பு கொடுத்து 3 பேரை மறந்த பைடன் - அதுவே அவருக்கு எதிராக திரும்பியது

Update: 2024-12-24 03:41 GMT

அமெரிக்காவில் 37 பேருக்கு மரண தண்டனையை ரத்து செய்து அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 40 பேர் தண்டனையை குறைக்க‌கோரி வலியுறுத்தியிருந்த நிலையில், 37 பேருக்கு, பரோல் இல்லாத ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளார். 2013ஆம் ஆண்டு பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்பு குற்றவாளி, 2015ல் தேவாலயம் சென்ற 9 பேரை கொன்ற குற்றவாளி, 2018ல் தேவாலயத்தில் 11 பேரை கொலை செய்த குற்றவாளி ஆகிய 3 பேரின் தண்டனையில் தலையிட ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மன்னிப்பு வழங்கி தண்டனை குறைக்கப்பட்ட 37 பேரில், பாலியல் குற்றவாளிகள், குழந்தைகளை கொலை செய்தவர்கள் உள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்