பவர்ஃபுல்லான எதிரி மீது துணிந்து கை வைத்த இஸ்ரேல் - உலகமே அஞ்சும் பெரும் போர் வெடிக்கும் அபாயம்

Update: 2024-09-24 11:35 GMT

லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரமாக்கும் நிலையில், அங்கிருக்கும் சூழல் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

சாரைசாரையாக கார்களில் மக்கள் ஏதோ அச்சத்தில் செல்லும் இந்த காட்சி காசாவிலிருந்து வந்தது அல்ல... மாறாக... இஸ்ரேலின் வடக்கு எல்லையை பகிரும் லெபனானில் இருந்து வந்தது.

பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேலிய வான்படை வீசும் ஏவுகணைகளால் கட்டடங்கள் சிதையும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆக்ரோஷ தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக, தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்குகளை அழிக்கப்போவதாக சூளுரைத்தது இஸ்ரேல்.. அங்கிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறும் செல்போனுக்கு குறுஞ்செய்தியை அனுப்பியது. சொன்னபடியே தாக்குதலை நடத்த மக்களும் வெளியேறினர்.

தெற்கு லெபனானில் இருந்து பெய்ரூட்டை நோக்கி கார்கள் படையெடுத்தது... அப்படி வெளியேறியவர்களில் இஸ்ரேலை விட மாட்டோம், அச்சமாக இருக்கிறது என்ற கலவையான பேச்சு தென்பட்டது.

இஸ்ரேலை அழிக்க நினைக்கும் ஹிஸ்புல்லா ஈரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழுவாகும்.

இக்குழுவை அவ்வப்போது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் தட்டி வைப்பது வழக்கமான ஒன்றே.. ஆனால் இப்போது நடக்கும் தாக்குதல் 2006 போருக்கு பின்னர் லெபனான் பார்க்கும் பெரும் உயிரிழப்பை கொண்ட பயங்கர தாக்குதலாகும். 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் ஒட்டுமொத்தமாக ஆபத்தை ஒழிக்கும் வகையில், ஹிஸ்புல்லாவை அங்கிருந்து விரட்ட இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தெளிவாகியிருக்கிறது.

மறுபுறம் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்களை ஏவிதான் பார்க்கிறது. ஆனால்... அவற்றை வானிலேயே தவிடுபொடியாக்கி வருகிறது இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு கட்டமைப்பு....

அதையும் மீறி இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா ராக்கெட்கள் விழுவதும்... இஸ்ரேலில் அபாய ஒலி எழுப்பப்படுவும் தொடர்கிறது. இஸ்ரேலின் பெரிய வணிக துறைமுகமான ஹைஃபாவை இலக்காக வைத்தும் ஏவுகணைகளை வீசுகிறது ஹிஸ்புல்லா... அவற்றை எதிர்நோக்கும் இஸ்ரேல் படை, லெபனானுக்குள் ஆழமாக நுழைந்து தாக்குதலை நடத்தியிருக்கிறது.

அதுபோக சிரியா எல்லையை ஒட்டிய லெபனானின் பெகா Bekaa பள்ளத்தாக்கிலிருந்தும் மக்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. பெகா பள்ளத்தாக்கில் ஹிஸ்புல்லாக்கள் ஆயுத கிடங்குகளை அழிக்கப்போவதாகவும், அங்கிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறவும் என கேட்ட இஸ்ரேல் தாக்குதலையும் தொடங்கியுள்ளது.

800-க்கும் அதிகமான ஹிஸ்புல்லாக்கள் நிலையை இஸ்ரேல் தாக்கியிருக்கிறது.

இதற்கிடையே எங்கள் பாலிசி தெரியாதவர்களுக்கு, ஒன்றை சொல்கிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

Tags:    

மேலும் செய்திகள்