அல்லு அர்ஜுன் வீட்டில் நடந்த சம்பவம் - டோனை மாற்றி ரேவந்த் ரெட்டி சொன்ன தகவல்
புஷ்பா 2 சிறப்புக் காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உள்ளே அத்துமீறி நுழைந்த அவர்கள் கற்களை கொண்டும் வீட்டை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திரையுலக பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் மாநில டிஜிபி மற்றும் நகர போலீஸ் கமிஷனர் ஆகியோர், கடுமையாக செயல்பட உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மெத்தனப்போக்கை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.