வல்லரசை கட்டி ஆளும் வாய்ப்பு இந்திய இரத்தத்திற்கு? டிரம்ப் முடிவில் ஒளிந்திருக்கும் ரகசியம்

Update: 2024-03-06 06:11 GMT

வல்லரசை கட்டி ஆளும் வாய்ப்பு இந்திய இரத்தத்திற்கு? டிரம்ப் முடிவில் ஒளிந்திருக்கும் ரகசியம்

அதிபர் வேட்பாளருக்கான உள்கட்சி தேர்தலில், முதல் முறையாக ஒரு மாகாணத்தில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை தேர்வு செய்ய உள்கட்சி தேர்தல் மாகாண வாரியாக நடைபெற்று வருகிறது.

4 கிரிமினல் வழக்குகள் மற்றும் ஏராளமான சிவில் வழக்குகளை எதிர்கொண்டுள்ள டிரம்ப், இதுவரை 8 மாகாணங்களில் வென்று 244 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

தனது சொந்த மாகாணமான தெற்கு கரோலினா உள்ளிட்ட 8

மாகணங்களிலும் தோல்விடைந்த நிக்கி ஹாலே, முதல் முறையாக வாஷிங்கடன் டி.சியில் வென்று, 43 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

கருத்துகணிப்புகளில் ஜோ பைடனை முந்தி வரும் டிரம்ப்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லும் வாய்ப்பு வெகுவாக

அதிகரித்துள்ளது.

துணை அதிபர் வேட்பாளருக்கான பட்டியலில் இந்திய

வம்சாவளியினரான விவேக் ராமசாமி, டெக்சாஸ் ஆளுநர் டிம்

அபாட் உள்ளிட்ட பலரும் உள்ளனர். டிரம்ப் யாரை தேர்வு

செய்வார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும், கிரிமினல்

வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்படும் அபாயம்

தொடரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால், பதவி விலக

நேரிடும். இது போன்ற சூழலில் துணை அதிபராக இருப்பவர்

உடனடியாக அமெரிக்க அதிபராக பதவியேற்பார்.

ஒரு குற்ற விசாரணை காரணமாக நிக்சன் பதவி

விலகிய பின், துணை அதிபராக இருந்த ஜெரால்ட் ஃபோர்ட்

அதிபராக பதவியேற்றார்.

விவேக் ராமசாமியை துணை அதிபர் வேட்பாளாரக டிரம்ப்

தேர்வு செய்தால், எதிர்காலத்தில் டிரம்ப் பதவி விலக

நேரிட்டால், அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு அவருக்கு

கிடைக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்