சுயரூபத்தை காட்டிய புதின்... உலகமே பார்க்க உக்ரைன் மீது விழுந்த பாலிஸ்டிக் ஏவுகணை
சுயரூபத்தை காட்டிய புதின்... உலகமே பார்க்க உக்ரைன் மீது விழுந்த பாலிஸ்டிக் ஏவுகணை - கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்
உக்ரைனில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதில் 49 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்டாவாவில் உள்ள ராணுவ தகவல் தொடர்பு மையத்தை குறிவைத்து ரஷ்யா ஏவுகணைகளை வீசியதில் அப்பகுதியில் கட்டிடங்கள் சிதைந்துள்ளன. இந்த தாக்குதலில் 49 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி தொடரும் வேளையில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள், ரஷ்ய தாக்குதலை தடுக்கும் வகையில் அதிக வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை வழங்க வேண்டும் எனவும், ரஷ்யாவுக்குள் நீண்ட தொலைவு சென்று ஏவுகணைகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.