கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்பு.. மாணவியை கடத்தியது யார்? விசாரணையில் திடுக்கிடும் தகவல்
இலங்கையின் கண்டி அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலில் ஈடுபட்ட நபரின் செல்போன் சிக்னலை கொண்டு, மாணவி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், மாணவியின் தந்தையை தொடர்பு கொண்ட அந்த நபர், பணம் கேட்டு பேரம் பேசியுள்ளார். இந்நிலையில், அம்பாரை பகுதியில் மாணவியை மீட்ட போலீசார், அவரை கடத்திய முகமது நாசரை கைது செய்தனர். மாணவியை இரவு முழுவதும் தனியார் விடுதியில் அவர் தங்கவைத்திருந்த நிலையில், மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணையில் முகமது நாசர் சிறுமியின் உறவினர் தான் என்பதும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அவர் சிறுமியை கடத்தியதும் தெரியவந்துள்ளது.