விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டரை தேடும் பணிகளில் தேவையான உதவிகளை செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அரசின்
செய்தி தொடர்பாளர் மரியா ஷகரோவா,
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம்
குறித்து ரஷ்யா விசாரணை நடத்தி
வருவதாக தெரிவித்தார். ரஷ்யா
2 விமானங்களில் மீட்பு படை
வீரர்கள் 50 பேரை விபத்து நிகழ்ந்த
பகுதிக்கு அனுப்பி இருப்பதாவும்
அவர் தெரிவித்தார்.