கொக்கைன் போதையில் உலா வரும் சுறா மீன்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Brazil Sharks cocaine

Update: 2024-07-26 15:44 GMT

பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரியோ கடற்கரை பகுதிகளில், சுறா மீன்கள் கொக்கைன் போதையில் உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள நாடாக பிரேசில் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கடத்தல்காரர்களால் கடலில் தவற விடப்பட்ட கொக்கைனால், சுறா மீன்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மீன்களின் தசை மற்றும் ஈரலில் இந்த பாதிப்புகள் அதிகம் இருப்பதாகவும், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களாலும் மீன்கள் பாதிக்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்