சர்வதேச சமையல்ல இன்னைக்கு நாம சமைக்க போற ரெசிபி... scrambled eggs with shrimp... அதாவது இது வரை வெங்காயம் போட்டு சுட்ட ஆம்லெட்ட... இறால் போட்டு செய்யுற அசத்தலான ரெசிபி தான் scrambled eggs with shrimp...
எது ஆம்லெட்ல இறால்லா... யார்யா இந்த வினோதத்தை பண்ணதுனு பாத்தா... அந்த வினோதத்துக்கே பேர் போன நம்ம சீனாகாரங்க தான்...
சம்பளம் போட்டு 5 நாள் கூட தாண்டல அதுக்குள்ள... EMI, கேஸ் பில், கரண்டு பில், வாடகைனு மொத்தம் சம்பளமும் புடிங்கியாச்சு இந்த லச்சனத்துல நம்ம நாக்குக்கு டேஸ்ட்டியா நான் வெஜ் கேக்குதானு... நீங்க மைன்ட் வாய்ல நெனைக்குறது எனக்கு புரிது.. பட், நீங்க நெனக்குற மாதிரி இந்த ரெசிபிக்கு பெரிய செலவுலாம் ஆகாதுங்க.. வெறும் 100 ரூபாய்ல செஞ்சு முடிச்சுடலாமாம்...
அப்புறம் என்ன யோயிச்சுக்கிட்டு... வாங்க சட்டு புட்டுனு சமைச்சு சாப்பிட ஆரம்பிக்கலாம்....
scrambled eggs with shrimp சமைக்க தேவையான பொருட்கள்...
இறால், முட்டை , மிளகு தூள், உப்பு, வெங்காய தாள், கார்ன் பிளார் மாவு, தண்ணீர், எண்ணெய்... அம்புட்டு தான் இனி சமைக்க ஆரம்பிச்சுடலாம்....
சமையலின் முதல் கட்டமா... தோலுரிச்ச இறால்ல ஒரு 12 பீஸ் எடுத்துக்கோங்க... அடுத்து அது மேல கால் ஸ்பூன் மிளகு தூள், உப்பு இது ரெண்டையும் போட்டு நல்லா மிக்ஸ் பண்ணி கொஞ்சம் நேரம் ஊற போடுங்க...
அடுத்து நீளமான ஒரு வெங்காய தாள எடுத்து பொடி பொடியா நறுக்கி தனியா எடுத்து வச்சுக்கோங்க...
இந்த இடம் தான் சமையலுக்கு முக்கியமான இடம் அதுனால ஒரு சின்ன சைஸ் பாத்திரத்துல ஒரு ஸ்பூன் கார்ன் பிளார் மாவு, கால் ஸ்பூன் உப்பு, மிளகு தூள், மூனு ஸ்பூன் தண்ணி ஊத்தி நல்லா கலக்கிக்கோங்க...
நெக்ஸ்ட்டு அதுல 4 முட்டைய உடைச்சு ஊத்தி மறுபடியும் நல்லா கலக்கிக்கோங்க...
எல்லாம் ரெடியானதும் சூடேரிய கடாய்ல மூனு ஸ்பூன் எண்ணெய்ய ஊத்தி... உரிச்சு வச்ச இறால்ல போட்டு... கோல்டு கலர்ல வறுத்துக்கோங்க... இறா கலர் கோல்டுக்கு வந்ததும் நறுக்கி வச்ச வெங்காய தாளையும் போட்டு... லைட்டா ஒரு வதக்கு வதக்கிக்கோங்க...
பைனல்லா கலக்கி வச்ச முட்டைய ஊத்தி அரை வேக்காடா கிளரி எடுத்தா... சுட... சுட... scrambled eggs with shrimp ரெடி...