நடுக்கடலில் பைக் ஓட்டி சாதனை...சர்ஃபிங் வீரனாக கலக்கிய நாய்கள்...

Update: 2024-09-15 10:31 GMT

GEORGIA நாட்ட சேந்த பைக் சாகச வீரர் தான் Gakheladze... எது பண்ணாலும் அதை சாதனையா பண்ணனும்னு நெனைக்குற ரெண்டு நாளைக்கு முன்னாடி பண்ண சம்பவம் தான் இப்போ உலக சாதனை பட்டியல்ல ஒன்னா இருக்கு... அதாவது கடல்ல கப்பல் ஓட்டுறாங்க... போட் ஓட்டுறாங்க... ஏன் பைக் ஓட்ட கூடாதுனு முடிவு பண்ணிருக்காரு Gakheladze... என்னாது கடல்ல பைக்கானு உங்கள மாதிரி தான் நானும் சந்தேகத்தோட யோசிச்சேன்... ஆனா மனுசன் நெனச்சத சாதிச்சுட்டாருங்க...

கடல் பைக்க ஓட்டுறதுக்கு வெரும் பைக்கா மட்டும் இருந்தா பத்தாதுனு... பைக் டயர், என்ஜின், டயர் கீழ சர்பின் போர்டுனு ஒரு சில பார்ட்ஸ் மாத்தி சாகச போட்டிக்கு ரெடியாகிட்டாரு... போட்டி தொடங்குனதும் சீறி பாஞ்ச Gakheladze... நடு கடல்ல 33 கிலோ மீட்டர் பைக் ஓட்டி காட்டி சாகசம் பண்ணிட்டாரு...

Gakheladze நீங்க என்னா சாகசம் பண்ணிட்டீங்கனு பெருமை தட்டிக்கிறீங்க... டிசம்பர் மாசம் மழை பெய்யும் போது எங்க ஊரு பக்கம் வந்து பாருங்க... மழை தண்ணி பைக்க சீறி பாஞ்சி ஓட்டுவோம்... அப்போ தெரியும் எங்களோட சாகசம் என்னானு...

அமெரிக்கால உள்ள கலிஃப்போர்னியா கடற்கரைல ஒவ்வொரு வருஷமும் நாய்களுக்காக நடக்குறது தான் இந்த சர்ஃபிங் போட்டி... பொதுவா நாய்கள்ன வாக்கிங் போறது... தூக்கி போட்ட பந்த கவ்விட்டு வரதுனு இல்லாம... வேற எதாச்சும் வித்தியாசமா பண்ணனும்னு தங்களோட நாய்களை சர்ஃபிங் வீரனா மாத்திருக்காங்க இந்த ஊர் மக்கள்... இந்த போட்டில கலந்துக்கிறதுக்காக... குட்டி நாய்ல ஆரம்பிச்சு பெரிய சைஸ் நாய் வரை சர்ஃபிங் போர்டோட வண்டி கட்டி கிளம்பி வந்துருச்சுங்க...

ஒரு சில நாய்கள் போட்டில கீழ விழுந்து சில்றை வாருனாலும்... மறுபடியும் மன தைரியத்தோட சர்ஃபிங் பண்ணுதுங்குறது தான் ஹைலைட்டான விசயமே...

ஹேய் இவன் யாருப்பா ரிவர்ஸ்ல ஓட்டிட்டு வரான்... டேய் நாய் தம்பி உன்ன தான்ட மூஞ்சிய திருப்பி வச்சுட்டு வாடா...

Tags:    

மேலும் செய்திகள்