ஸ்பெயினின் கிழக்கு வலென்சியா மண்டலத்தில் கடந்த 29ஆம் தேதி கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வடிந்துள்ள நிலையில், உட்டியல், டொரண்ட், பைபோர்டா உட்பட பல்வேறு நகரங்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. பைபோர்டா நகரில் தெருக்களில் கார்கள் குவிந்து, குப்பைமேடு போன்று காட்சியளிக்கிறது. டொரண்ட் நகரில், ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள், ஆற்றங்கரையில் ஆங்காங்கே சிக்கியுள்ளன. உட்டியல் நகரில் புல்டோசர்கள் மூலம் சேற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கேட்டர்ரோஜாவில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு, குவிந்து கிடக்கின்றன. ஆம்புலன்ஸ் செல்ல முடியாத பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.