தமிழ், பெங்காலி, மராட்டி, மணிப்பூரி ஆகியவை தாழ்ந்த மொழிகள் என்பதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் என்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் விர்ஜீனியாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய அவர், சில மாநிலங்கள், சில மதங்கள், சில சமூகங்களை தாழ்ந்தவை என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அனைத்து மாநிலங்களும் தனித்தனி வரலாறு மற்றும் பாரம்பரியம் கொண்டவை என்ற ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்கள் இந்தியாவை புரிந்துகொள்ளவில்லை என்றார்.