உதவிக்காக அழைத்த கறுப்பின பெண்ணை காவலர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியுள்ளது...
ஸ்பிரிங்ஃபீல்ட் பகுதியில் வசித்து வரும் 2 பிள்ளைகளின் தாயான மஸ்ஸி, வீட்டில் சந்தேகத்திற்குரிய ஆள்நடமாட்டம் இருப்பதாக பயந்து போய் போலீசுக்கு அழைத்துள்ளார்... க்ரேசன் அன்ற காவலரும் மற்றொரு காவலரும் மஸ்ஸியின் வீட்டிற்கு சென்றனர்... வீட்டின் முன்பு கண்ணாடி உடைந்த நிலையில் ஒரு சொகுசு கார் நின்றிருந்த நிலையில் அது யாருடையது என தனக்குத் தெரியாது என மஸ்ஸி கூறினார்... காவலர்கள் உள்ளே நுழைந்தது முதல் தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தார் மஸ்ஸி... மஸ்ஸியின் அடையாள அட்டையைக் கேட்ட போலீசார் சுடுதண்ணீர் கொதித்துக் கொண்டிருந்த அடுப்பை அணைக்க உத்தரவிட்டனர்... உடனடியாக மஸ்ஸி அடுப்பை நெருங்கியபோது பேசிக் கொண்டிருந்த காவலர் க்ரேசன் அவரது முகத்தில் துப்பாக்கியால் சுட்டார்... க்ரேசன் தானும் மஸ்ஸிக்கு முதலுதவி செய்யாமல், உதவி செய்ய சென்ற மற்றொரு காவலரையும் தடுத்தார்... தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஸ்ஸி பரிதாபமாக உயிரிழந்தார். காவலர் க்ரேசன் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்... இச்சம்பவம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையைப் போலவே அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...