உலகிற்கு கேட்டை திறந்த கிம் - உடைய போகும் வடகொரிய ரகசியம்- மர்ம தேசத்திற்கு விசிட் அடிக்க ரெடியா?

Update: 2024-08-16 11:06 GMT

5 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது வடகொரியா... வடகொரியாவுக்கு அவ்வளவு எளிதில் சுற்றுலா செல்ல முடியுமா?...என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளன?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

கொரோனாவுக்கு முன்பே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடு வடகொரியா...

வடகொரியா என்றாலே அணு ஆயுதங்கள்... ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான தலைவர் கிம் ஜாங் உன்... தான் பலருக்கும் நினைவு வரும்...

ஆனால் உண்மையிலேயே எண்ணற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த அழகான ரகசிய பிரதேசம் தான் இந்த வடகொரியா...

வடகொரியாவையும் சரி... அங்கு சுற்றுலா செல்பவர்களையும் சரி...உலகமே சற்று வித்தியாசமாகத் தான் பார்க்கும்...

நீங்கள் வடகொரிய எல்லையை மிதித்து விட்டாலே ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடப்படும்...

நிச்சயம் அது ஒரு திட்டமிடப்பட்ட சுற்றுலாவாகத்தான் இருக்கும்...

இந்தியாவைப் போல் எங்கு வேண்டுமானாலுமெல்லாம் வடகொரியாவில் சுற்றுலா பயணிகள் சுற்றித் திரிய முடியாது...

எப்போதும் உங்களை ஒரு கண் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கும்...

அவர்கள் அனுமதிக்கும் இடத்தை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்...

அனுமதி இல்லாமல் நினைக்கும் இடத்தில் எல்லாம் செல்ஃபி எடுக்க முடியாது...

வடகொரிய தலைவர்களைப் பொறுத்தவரை அந்நாட்டு மக்களுக்கு கடவுள்களைப் போன்றவர்கள்...

அவர்களின் படத்தையோ...சிலைகளையோ அவமதித்தால் கொலைக்குற்றம் போல் கருதப்படும்...

வடகொரிய விடுதியில் இருந்த போஸ்டரைத் திருட முயன்ற இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையெல்லாம் விதித்ததாகக் கூறுகிறார்கள்...

இப்படி ஏகப்பட்ட ரூல்ஸ் உண்டு வடகொரியாவில் சுற்றுலாப்பயணிகளுக்கு...

கொரோனா காலத்தில் மூடிய எல்லைகளை எப்போதோ மற்ற நாடுகளெல்லாம் திறந்து விட்டன...

ஆனால் கொரோனாவையே அடக்கம் செய்து நினைவு தினம் கொண்டாடிய பிறகும் கூட வடகொரியாவோ எல்லைகளை திறக்கவில்லை...

சுற்றுலாத்துறை ஆட்டம் கண்டதாலோ என்னவோ...இப்போதுதான் கதவுகளைத் திறக்க மனம் வைத்துள்ளது வடகொரியா...

மலைகள் நிறைந்த வடக்கு நகரமான சாம்ஜியோனில் விரைவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வாய்ப்புண்டு...

அதேபோல் வடகொரியாவின் மற்ற பகுதிகளுக்கு வரும் டிசம்பரில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...

இருகரம் கூப்பி வடகொரியா வரவேற்க...பெட்டி படுக்கையுடன் காத்திருக்கின்றனர் சுற்றுலா பயணிகள்...

Tags:    

மேலும் செய்திகள்