கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த மேத்யூ, மனைவி, குழந்தைகளுடன் குவைத்தின் அப்பாசியாவில் இருக்கும் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்துவந்தார். சமீபத்தில் கேரளாவில் இருக்கும் சொந்த வீட்டுக்கு வந்துவிட்டு மேத்யூநேற்று குவைத்துக்கு சென்றுள்ளார். குடியிருப்பிலிருக்கும் பிளாட்டில் குடும்பத்தோடு தூங்கிய போது இரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றி எரிந்ததில் மேத்யூவும், அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் குவைத்தில் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 46 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியில் உரையச் செய்த சூழலில், மேத்யூ குடும்ப உயிரிழப்பு செய்தியும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.