நேரடி விவாதத்தில் டிரம்ப் அடித்த அடி.. அதிபர் பந்தயத்திலிருந்து விலகுகிறாரா பைடன்..?

Update: 2024-06-29 08:15 GMT

நேரடி விவாதத்தில் டிரம்ப் அடித்த அடி.. அதிபர் பந்தயத்திலிருந்து விலகுகிறாரா பைடன்..?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விவாத நிகழ்ச்சியில் ட்ரம்ப்பிற்கு எதிராக வலுவாக விவாதிக்காத பைடன், தான் மீண்டும் மீண்டு வருவேன் என உறுதியளித்துள்ளார்...எனவும் நம்பிக்கை தெரிவித்தார்... "தோல்வியுற்றால் மிகவும் ஆபத்து என்பதை அறிந்திருப்பதாகவும், இந்த வேலையை என்னால் செய்ய முடியும் முழு மனதுடன் நம்பவில்லை என்றால் நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன் எனவும் பைடன் விளக்கியுள்ளார்...

பைடனின் பலவீனமான விவாதத்தைக் கண்டு அவரது கட்சியினர் அதிருப்தி அடைந்த நிலையில் நவம்பரில் நடக்கப்போகும் அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பைத் தோற்கடிக்க விரும்புவதாக பைடன் தெரிவித்துள்ளார்... அதிபர் தேர்தல் பந்தயத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பதற்கான அறிகுறி தென்படவில்லை... "நான் ஒரு இளைஞன் அல்ல...என்னால் இயல்பாக நடக்க முடியாது...முன்பு போல் சுமுகமாகப் பேச முடியாது... முன்புபோல் விவாதிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்...ஆனால் எனக்கு என்ன தெரியும் என்பதை நான் அறிவேன்...உண்மையை எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் அறிவேன்..." என்று விவாதத்திற்குப் பின் பைடன் மனம் திறந்துள்ளார்... "இந்த வேலையை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட பைடன், வீழ்ந்தால் மீண்டும் எழுவேன்"

Tags:    

மேலும் செய்திகள்