காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-01 01:06 GMT
  • புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் இன்று முதல் அமல்... குற்றங்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள்...
  • இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது, நாடாளுமன்றம்... நீட் விவகாரத்தை முன்னிறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு...
  • இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த மத்திய அரசு பரிசீலனை நடத்தி வருவதாக தகவல்... வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் வெடித்த நிலையில் திட்டம்... 
  • உங்கள் நிலத்தில் வீடு கட்டிவிட்டு உங்களிடமே வாடகை வசூலிப்பது தான் நீட் தேர்வு... அரசியலமைப்புக்கு எதிரானது நீட் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் விமர்சனம்...
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கப் போகும் மாபெரும் வெற்றிக்கு முன்கூட்டியே நன்றி... கானை ஒன்றியத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை...
  • டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் கொடுத்துவிட்டு, தமிழக அரசு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்... பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாதது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து... 
  • சென்னை வேப்பேரியில் சாலை விபத்தில் சிக்கிய இளம்பெண்ணின் கையில் துளைத்து மறுபுறம் வெளிவந்த கம்பி...
  • கட்டிங் இயந்திரத்தால் கம்பியை வெட்டி இளம்பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்கள்... ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
  • நீலகிரி மாவட்டம் உதகையில் ஐந்து மாத பச்சிளம் குழந்தையை தந்தையே அடித்துக் கொன்ற கொடூரம்... அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தந்தை வாக்குமூலம்... 
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய வடமாநிலத்தவர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது... கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், வீடுகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் விசாரணையில் அம்பலம்...
  • சிவகங்கை மாவட்டம் கட்டிகுளத்தில் ஐந்து நாளாக மின்சாரம் வழங்காததை கண்டித்து மின்மாற்றிக்கு பூஜைபோட்ட மக்கள்... இரவில் வீடுகளில் தீப்பந்தம் ஏற்றி நூதன போராட்டம்...
  • கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரம்... 3 பேர் கைது... ஆடு விற்பனையில் முன் பகை காரணமாக கொலை நடந்ததாக தகவல்...
  • சென்னையில் தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்... ஐந்து ஆண்டுகளில் முழுமையான தீர்வு எட்டப்படும் எனவும் பேட்டி... 
  • "வானவில் சுயமரியாதை' என்ற தலைப்பில் மேளதாளம், நடனத்தோடு சென்னையில் பிரம்மாண்ட பேரணி... தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்பு...
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கொட்டித்தீர்த்த மழை... கோடை வெப்பத்தை தணித்து நிலத்தை குளிர்வித்ததால் மக்கள் மகிழ்ச்சி... 
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், Follow on பெற்ற தென் ஆப்ரிக்கா நிதான ஆட்டம்... கடைசி நாளான இன்று வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி... 
  • விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்... முன்னணி வீரர்கள் ஜோகோவிச், அல்கராஸ் உள்ளட்டோர் களம் காண்கின்றனர்...
Tags:    

மேலும் செய்திகள்