அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் வட கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் , ஹெலன், கத்ரீனா சூறாவளிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உரிய நிவாரணங்களை வழங்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.