இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவ தளங்கள் பெரும் சேதம் அடைந்திருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 26 ஆம் தேதி நூற்றுக்கும் அதிகமான இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என ஈரான் தெரிவித்தது. இப்போது ஈரானில் ராணுவ தளங்களில் பெரும் நாசம் ஏற்பட்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பார்சின் ராணுவ தளத்தில் அணு ஆயுத மேம்பாட்டு மையாக செயல்பட்ட கட்டிடம், ஏவுகணைகளுக்கு திட எரிபொருள் கலக்கும் மையம், ஏவுகணைகளை தயாரிக்கும் இடங்களை இஸ்ரேல் அழித்திருக்கிறது என செயற்கைக்கோளை அய்வு செய்யும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பெருமளவு ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறனை பாதித்திருக்கும் எனவும் அவர்கள் சொல்கிறார்கள்