ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து - கண்ணீர் சொட்ட சொட்ட ரோட்டில் அமர்ந்து மக்கள் பிரார்த்தனை

Update: 2024-05-20 03:24 GMT

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்துக்கு உலகின் பல நாடுகள் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளன.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பத்திரமாக இருக்க இறைவனை வேண்டி கொள்வதாக அண்டை நாடான ஆர்மீனியா தெரிவித்துள்ளது. இதேபோல் துருக்கி அதிபர், ஈராக் அதிபர் , பாகிஸ்தான் பிரதமர், ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசு , சவுதி அரேபியா, எகிப்து, லெபனான், ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் தங்களது கவலையை பகிர்ந்துள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோரின் நலனுக்காக பிரார்த்தனை

செய்து கொள்வதாக பிரதமர் மோடி

தெரிவித்துள்ளார். ஈரான் மக்களுடன்

இந்தியா எப்போதும் இணைந்தே

இருப்பதாவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில்

அவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்

என்று தலைநகர் டெஹரானில் ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் சாலையில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கவலையில் உள்ள அனைவரும் கண்ணீர் மல்க இறைவனிடம் வேண்டி கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்