அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி ரோஸலின் கார்டன் உடல்நலகுறைவால் காலமானார். 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். இவரது மனைவி ரோஸலின் கார்ட்டன் 96 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.