ஸ்காட்லாந்தின் கிளாஸ்கவ் நகரில் உள்ள குருத்வாராவிற்கு இந்திய தூதர் விக்ரம் துரைசாமி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த, பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாதிகள், தூதரை வரவேற்க தாங்கள் வரவில்லை எனக்கூறி தடுத்து நிறுத்தினர். பிரிட்டனில் உள்ள எந்த குருத்வாராவுக்கும் இந்திய அதிகாரிகள் செல்ல அனுமதிக்க முடியாது என, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். குருத்வாராவில் இந்திய தூதர் தடுக்கப்பட்டது குறித்த தகவல், பிரிட்டன் வெளியுறவுத்துறை மற்றும் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.