அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ மற்றும் கொலம்பியாவில் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. இந்திய நேரப்படி இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்ந்ததால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பார்க்க முடியவில்லை. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணம் அமெரிக்கா, பிரேசில்,கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் முழுமையாக தெரிந்த நிலையில் அவற்றை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.