இறக்குமதி வரி உயர்வு | SriLanka | Tax Increase

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-03-17 14:46 GMT
இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பழங்கள், பாலாடைக்கட்டி, தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த வரி உயர்வு 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 

ஒரு கிலோ ஆப்பிள் மீதான இறக்குமதி வரி 200 ரூபாயும்,  திராட்சை மீதான வரி 100 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. 

தோடம்பழத்திற்கு  75 ரூபாயும், மாதுளைக்கு 100 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு கிலோ தயிருக்கான வரி 200 ரூபாயும், பாலாடைக்கட்டிக்கு 400 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்