உக்ரைன் - ரஷ்யா போர் : "பேச்சுவார்த்தையை தவிர்த்து வேறு வழியில்லை" - இந்தியா வலியுறுத்தல்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-03-12 03:43 GMT
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ரசாயன உயிரியல் ஆயுதங்களை உருவாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உதவுகிறது என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என இந்தியா நம்புவதாகவும், இவ்விவகாரத்தில் ராஜதந்திர மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படுவதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ரசாயன உயிரியல் ஆயுத பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் அது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள விதிகளின் படியே தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்