கொழும்பு துறைமுகத்தில் உல்லாச நடைபாதை திறப்பு
கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்தார்.;
கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்துள்ளார். இந்த நடைபாதை சில நாட்களுக்கு பிறகு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை திறப்பு விழாவில் சீன வெளி விவகாரத்துறை அமைச்சர் வாங்யி கலந்துக் கொண்டார். திறப்பு விழாவினை ஒட்டி புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான சீன தூதரகம், இலங்கை விளையாட்டு அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.