பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை..பலி எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு..
பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.;
சுமார் 1 கோடியே 50 லட்சம் பேர் வசிக்கும் பாஹியா மாநிலத்தில், கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் 72 நகராட்சிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 20 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.