அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம், கத்தாரில் கையெழுத்தானது. இதன் மூலம் 18 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.
ஆப்கானிஸ்தானில், கடந்த 18 ஆண்டுகளாக, தலிபான்கள் - அமெரிக்க படைகள் இடையே, போர் நடந்து வந்தது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியது. இதில் உடன்பாடு எட்டிய நிலையில், கத்தார் தலைநகர் தோகாவில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், இந்தியா சார்பில், கத்தாரில் உள்ள தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, 14 மாதங்களில் அமெரிக்கா தன்னுடைய படைகள் அனைத்தையும் விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளது.