மதுரையை மிரளவைத்த தீபாவளி.. வைகை ஆற்றங்கரையில் குவியும் மக்கள்

Update: 2024-11-01 02:11 GMT

மதுரையை மிரளவைத்த தீபாவளி.. வைகை ஆற்றங்கரையில் குவியும் மக்கள்

மதுரை மாநகரில், தீபாவளியானது கோலாமாக கொண்டாடப்பட்டது. காலை முதலே பட்டாசு வெடிப்புகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தீபாவளி இரவில், கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீட்டு வாசல்கள், மாடிகளில் பொது மக்கள் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தனர். இந்த நிலையில், வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வானவேடிக்கைகள் நடந்தது. பல வண்ணத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகளை, வைகை ஆற்று பாலத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்தனர். மேலும், வர்ண ஜாலங்களால் நிரம்பிய காட்சிகளை தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர். மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மட்டும் பட்டாசு வெடிப்பது குறைவாக இருந்த நிலையில், தற்போது நகரெங்கும் பட்டாசு புகைகளால் காற்று மாசுபட்டு காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்