தீவுத்திடலில் சூடு பிடித்த இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை

Update: 2024-11-01 02:10 GMT

தீவுத்திடலில் சூடு பிடித்த இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை

சென்னை தீவுத்திடலில், தீபாவளி தினத்தையொட்டி பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை நடைபெற்றது. வழக்கமாக தீபாவளிக்கு 2 வாரங்களுக்கு முன்பாக பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு 4 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று தீவுத்திடலில் பட்டாசு வாங்க ஆயிரக்கணக்கானோர் குவிந்த நிலையில், இன்றும் சிலர் பட்டாசு வாங்க குவிந்தனர். கடைகள் மூடப்படும் நேரத்தில் பட்டாசு விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் கடைசி சில மணி நேரங்களில் பட்டாசு வாங்க ஆர்வம் காட்டுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்